நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்!

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் எப்படி வாழ வேண்டும் எனக் கூறிய 25 தத்துவங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. அவர் சிரிக்க வைப்பவர் மட்டுமல்ல; சிந்திக்கவும் வைப்பவர்.

2 சிாிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.

4 கனவுகள் எல்லாம் நனவாகும்; நிறைய காயங்களுக்குப் பிறகு.

6 இதயம் வலித்தாலும் சிரி; அது உடைந்தாலும் சிரி.

8 எனக்கு நிறைய பிரச்சினைகள் உண்டு, ஆனால் என் உதட்டுக்கு அதெல்லாம் தெரியாது. அது சிரித்துக் கொண்டுதான் இருக்கும்.

10 கண்ணாடி என் நண்பன். ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை.

12 உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக் கூடாது.

14 எப்போதும் மழையில் நனைந்த படியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது என்பதால்.

16 நண்பர்களின் சிரிப்பைப் பார்க்கும் போது கண்ணீரை மறக்கிறேன், நண்பர்களின் கண்ணீரைப் பார்க்கும் போது சிரிப்பை மறக்கிறேன்.

18 நீ மகிழ்ச்சியாய் இல்லாத போது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்து புன்னகை செய்கிறது. ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும் போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது.

20 புன்னகைத்துப் பாருங்கள்; வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!

22 ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். இல்லை என்றால் வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டு விடுவீர்கள்.

24அதிகமா சிந்திக்கிறோம். மிகக் குறைவாகவே உணர்கிறோம்.

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின்