சிக்கன் 65 சிக்கனைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் இது கட்டாயம் இடம் பெறும்.
கடைகளில் செய்யப்படும் சிக்கன்65-யில் செயற்கை உணவுப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும்.
வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு சிக்கன் 65 செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத துண்டுகளாக்கப்பட்ட சிக்கன் – ½ கிலோ
எலுமிச்சம் பழம் – 1 எண்ணம் (சிறியது)
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1ஸ்பூன்
மிளகுத் தூள் – ½ ஸ்பூன்
சீரகத் தூள் – ½ ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
முட்டை – 1 எண்ணம்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
சிக்கன் 65 செய்முறை
முதலில் சிக்கனை அலசி சுத்தம் செய்யவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
எலுமிச்சையை சாறு பிழியவும்.
அலசி சுத்தம் செய்த சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அதனுடன் மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்க்கவும்.
பின் அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் ஒரு சேர கலக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கவும். பின் இக்கலவையை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை ஐந்து ஐந்தாகப் போட்டு வறுக்கவும்.
சிக்கன் துண்டுகள் நன்றாக வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான சிக்கன் 65 தயார்.
இதனை பிரியாணி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கறிவேப்பிலை மற்றும் மிளகாயை வறுத்து சிக்கன் 65-யில் சேர்க்கலாம்.
சிக்கன் துண்டுகளை வறுக்கும் போது அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.