மாரிமலை முழைஞ்சில்
மன்னிக்கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று
தீவிழித்து வேரி மயிர்
பொங்க எப்பாடும் பேர்ந்து
உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப்
புறப்பட்டுப் போதருமா போலே!
ஆண்டாள் நாச்சியார்
தன் காதல் தலைவன் கண்ணன்
சிங்கம் போல வர வேண்டும்
என்றே விரும்புகிறாள்!
ஆம். உலகத்தில்
அழியாத காதல் தலைவர்களெல்லாம்
ஆண்மை நிறைந்த சிங்கங்களே!
ஆனாலும்
தாய்மை எப்போதும்
தன் குழந்தையை
சமர்த்தாக சொன்னதைக் கேட்கும்
கிளிப் பிள்ளையாகவே இருக்க
வைக்க முயற்ச்சிப்பது வழக்கம்!
காதலிக்கும் பெண்ணின் கனவெல்லாம்
சிங்கநடை கொண்டவனால்
சிறந்த வாழ்வைப் பெறுவதும்
சீறும் குணத்தால் அல்லவை கண்டு
அஞ்சாதிருக்கும் ஆண்மகனின்
அருகாமை அடைவதுமாகவே
இருக்கக் கூடும்!
ஆண்டாளின் கண்ணனே
நம் இல்லத்தில் இருந்தால்
மனமுவந்து கொண்டாடுவோம்!
கீதை தந்த கண்ணன் அவன்
என்பதைப் புரிய வைப்போம்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!