சிட்டுச் சிறிய சிட்டு
செடியில் பாடும் சிட்டு
கொட்டைப் பாக்கைப் போலத்
தோன்றும் மஞ்சள் சிட்டு
நெல்லு மூக்கைத் திறந்தே
அங்கும் இங்கும் பறந்தே
செல்லும் துள்ளி எங்கும்
செடியில் வந்து தங்கும்
பூச்சிப் புழுவைத் தின்னும்
புதரில் கூடு கட்டும்
ஈச்சங் கொட்டை போல
இடுமே முட்டை சிட்டு
– வாணிதாசன்