திங்கள் முகம் கண்டேன்!
செவ்வாய் இதழ் கண்டேன்!
அதனுள் முத்துப் பரல்கள்
ஒளிரக் கண்டேன்!
கெண்டை விழிகள் கண்டேன்!
தண்டைக் கால்கள் கண்டேன்!
கடலலை போல் ஆடும்
கார் கூந்தல் கண்டேன்!
தங்க நிறம் கண்டேன்!
தனல்போல் தகிக்கக் கண்டேன்!
உனை வரைந்த ஓவியன்
உயிர் கொடுக்க மறந்தானோ?
பரவாயில்லை!
உயிரும் உணர்வும் இருந்தால்
உன்னை சீரழிக்க ஒருவன்
வருவான்…
நீ
சித்திரமாகவே இரு!
பத்திரமாகவே இரு!
ரோகிணி கனகராஜ்