சித்திரை மாதத்து தேவதையே என்றும்
தித்திக்க இன்று நீ வா மகளே!
எத்திசை நோக்கினும் உன் புகழே
முத்தமிழ் மூன்றுமே பொன் முத்துக்களே
எத்தனை மொழிகள் ஆயிடினும்
மூத்தவள் நீ எங்கள் தாயவளே
கேடு விளைப்பவைகள் நீங்கட்டுமே!
குரோதி ஆண்டில் நன்மைகள் ஓங்கட்டுமே!!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com