சித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்

திரிபலா – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

திரிகடுகு – சுக்கு, மிளகு, திப்பிலி

பஞ்ச துவர்ப்பிகள் – ஆல், அரசு, அத்தி, இத்தி, நாவல்

பஞ்ச மூலம் – ஈசுவரமூலி, சிறுகுறிஞ்சான், சுக்கு, பேரரத்தை, சிறு தேக்கு

தசமூலம் – பெருமல்லிகை, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, பெருங்குமிழ் வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், வாகை, கண்டங்கத்திரி, வில்வ வேர், நெருஞ்சில்

ஐங்கூட்டு நெய் – பசுவின் நெய், நல்லெண்ணெய், ஆமணக்கு நெய், புங்கன் நெய், தேங்காய் எண்ணெய்

தொக்கணம் – உடலில் எண்ணெய் தேய்த்து இலேசாகப் பிடித்து விடுதல்

குடிநீர், கசாயம் – தேவையான மூலிகைகளைச் சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூலிகை எடைக்கு 4 பங்கு நீர்விட்டு 1 பங்காக காய்ச்சி வடித்து இளஞ்சூடாக உள்ள போது சிறிது பனை வெல்லம் சேர்த்துப் பருக வேண்டும். (இக்குடிநீர் செய்த மூன்று மணி நேரத்திற்குள் பருகிடல் வேண்டும்.)

கரப்பான் பொருட்கள் – இனிப்பு, மீன், கருவாடு, கெளுத்திமீன், கோழி, கத்தரிக்காய், தக்காளி, கொள்ளு, வரகு, தட்டை பயிறு, மொச்சை, வாழைக்காய், அகத்திக்கீரை, பாகற்காய், எண்ணெய் வகைகள்

வாயுப் பொருட்கள் – வாழைக்காய், உருளைக் கிழங்கு, கோழி முட்டை, பருப்பு வகைகள், கடலை மாவு, கொள்ளு, கொத்தவரங்காய்

மாந்தப் பொருட்கள் – மாம்பழம், கொய்யா, பலா, வாழைப்பழம், மாவுப் பொருள்கள், எண்ணெய் வகைகள்

பஞ்சமுட்டிக் கஞ்சி – பச்சரிசி, பாசிப் பயறு, துவரை, கொண்டைக் கடலை, உளுந்து சேர்த்து வெள்ளைத் துணியில் முடிந்து நீரில் போட்டு அடுப்பேற்றிக் கஞ்சி செய்ய வேண்டும்.