தன்மானம்
பணம் உள்ளவன்
பணம் இல்லாதவன் என்ற
வேறுபாடு கருதாது
தன்மானம்
சாது
தொடாத வரை தேள்கூட
சாதுவானதுதான்
தொட்டுவிட்டால் தேன்கூடும்
ஆபத்துதான்…
கவனக் குறைவு
பிள்ளைகளின் மோசமான
எதிர்காலத்திற்கு
பெற்றோர்களின் கவனக் குறைவே
காரணம்…
மனதால் மறுக்க முடியாத
உண்மை…
உழைத்துப் பிழையுங்கள்
மனிதர்களே! மனிதர்களே!
பிழைப்புக்காக அலையலாம்
பிழைப்புக்காக வளையாதீர்
உழைத்துப் பிழையுங்கள்!
ஏறிய ஏணியை மறவாதீர்
ஏற்றி விட்ட ஏணியை
ஏறிய பின் உதைத்து விடாதீர்கள்
காலம் மாறிய பிறகு
திரும்ப நினைத்தால்
இறங்க ஏணி இல்லாமல்
தவிப்பீர்!
ஏற்றி விட்ட ஏணியை
மறவாதீர்!
இரு குணம்
மனிதனாக பிறந்த அனைவருக்கும்
இரண்டு குணம் உண்டு
ஒன்று நல்ல குணம்
மற்றொன்று தீய குணம்
முழுநேர நல்லவர்
யாருமில்லை உலக மனிதரில்…
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
மறுமொழி இடவும்