நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.
நண்பர்களிடம் அவர்களது வாழ்க்கை எவ்விதக்
குறைபாடுகளுமின்றி, முழுமையான, பூரணமான
அம்சங்களுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை விட
அவர்கள் அவ்வாறு இருக்க / விளங்க நாம்
முன்னுதாரணமாகத் திகழ்ந்து உதவுவதே மிகச் சிறந்த
நட்பாக இருக்க முடியும்.
ஒவ்வொன்றிலும் வெற்றியை நோக்கி முன்னேறும்
சமயம், நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்துவதை விட,
வெற்றியடைந்த பின் எப்படியிருந்தோம் என்பதை
மறக்காமலிருப்பதே சாலச் சிறந்தது
வாழ்க்கையில் வெற்றிபெற துணிந்து
இறங்கி செயல்படுதல் அவசியம்.
வெற்றி பெற்றால் மற்றவர்களுக்கு
வழிகாட்டியாக இருக்கலாம்.
தோல்வியடைந்தால் மற்றவர்களுக்கு
படிப்பினையாக அமையலாம்.
வெற்றி என்பது புத்திசாலித்தனம், சமார்த்தியம், சாதுர்யம்
என்னும் சக்கரங்களில் ஓடும் ஓர் வாகனம்.
தன்னம்பிக்கை என்கிற எரிசக்தி இல்லாமல்
வாகனப் பயணம் முடியாத காரியம்.
நாம் செய்யும் தவறு / தப்பு தான்
வெற்றிக்கான முதற்படி என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
உண்மை என்னவெனில் செய்கிற தவறை / தப்பைத் திருத்திக்
கொள்ளுதலே வெற்றிக்கான முதற்படி.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!