சின்னஞ்சிறிய பொண்ணு நானும் சிறகடிச்சிப் பறக்க நினச்சேன்.
கண்ண மூடி கனவுல
கலர்கலரா ஆசப்பட்டேன்.
பள்ளிக் கூடம் போணுமின்னு
பவுசா நானும் நினச்சிருந்தேன்.
பொட்டப்புள்ள நீயுந்தான்
படிச்சா என்னத்த கிழிக்கப்போற?
அப்பா ஆயி சொல்லவுந்நான்
விளக்கில் விழுந்த விட்டிலானேன்.
தம்பி பாடம் படிக்கையிலே
தவிக்குது மனசு பூராவுந்தான்.
எட்டி நானும் பார்க்கையிலே
ஏளனமாய்ப் பார்த்தான் தம்பி!
ஏக்கம் நிறஞ்ச மனசோடத்தான்
எடுத்து விட்டேன் சபதமுமே
பட்டினிக் கிடந்து போராடியே
பள்ளிக்கூடம் போவேன் நானு!
படிச்சு படிச்சு கலெக்டராகி
பறந்து போவேன் காருல தான.
படிக்க வேணும் பொண்ணுங்கதான்
பக்காவாக நானும் சொல்வேன்.
பக்கத்துணையா நானிருப்பேன்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!