சின்ன வெங்காயச் சட்னி

சின்ன வெங்காயச் சட்னி செய்வது எப்படி?

சின்ன வெங்காயச் சட்னி எளிதாக செய்யக்கூடிய சுவையான சட்னி ஆகும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம்.

சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி இதனைத் தயார் செய்வதால் இது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் விளங்குகிறது.

இனி சுவையான சின்ன வெங்காயச் சட்னி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20 எண்ணம் (சுமார் 50 கிராம்)

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

மிளகாய் வற்றல் – 4 எண்ணம்

கறிவேப்பிலை – 3 கீற்று

புளி – சிறிய பாக்கு அளவு

நல்ல எண்ணெய் – 1 குழிக்கரண்டி (3 ஸ்பூன்)

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்

கடுகு – ‍ 1/2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ‍ 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

பெருங்காயம் – மிகவும் சிறிதளவு

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.

உளுந்தினைச் சேர்த்ததும்

உளுந்தம் பருப்பு சிவந்ததும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் தோலுரித்த வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெள்ளைப் பூண்டு சேர்த்ததும்

மற்றொரு நிமிடம் கழித்து அதில் மிளகாய் வற்றல் சேர்த்துக் கிளறவும்.

மிளகாய் வற்றல் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்ததும்

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் புளி சேர்த்து இரண்டு தடவை வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.

புளி சேர்த்ததும்

இறக்கிய கலவையை ஆற வைக்கவும். ஆறியதும் அதனை மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

தாளிதம் செய்யும்போது

அதனுடன் கலவை விழுதினைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒருநிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

விழுதினைச் சேர்த்ததும்

சுவையான சின்ன வெங்காயச் சட்னி தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு வெல்லம் சேர்த்து சட்னி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.