சிறுகண்பீளை – மருத்துவ பயன்கள்

சிறுகண்பீளை முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும், பாண்டு, இரத்தச்சூடு (சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

சிறுகண்பீளை வேரை உட்கொண்டால் சிலவகை பாம்புக்கடி விஷம் மற்றும் வெறிநாய்க்கடி விஷம் குணமாவதாக நாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீரகக் கல்லைக் கரைக்கும் தன்மை தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுகண்பீளை சிறுசெடி ஆகும். சிறுகண்பீளை இலைகள், மாற்றடுக்கில் அமைந்தவை சிறியவை. சிறுகண்பீளை பூக்கள், சிறியவை, வெண்மையானவை, கொத்தானவை. இலைக் காம்புகளின் அருகில் அமைந்தவை. நிமிர்ந்து வளரும் தன்மையுடனோ தரையில் படர்ந்த வகையில் வளரும் தன்மையுடனோ காணப்படும்.

சிறுகண்பீளை செடிக்கு கற்பேதி, பொங்கல்பூ, சிறுபூளை, சிறுபீளை, கண்ணுப்பூளை ஆகிய பெயர்களும் உண்டு. தமிழகம் எங்கும் பயிரிடாத நிலங்கள், வேலிகள், ஏரிகள், குளக்கரைகள் மற்றும் தரிசு நிலங்களில் இயற்கையாக வளர்கின்றது. முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

சிறுகண்பீளை
சிறுகண்பீளை

 

சிறுநீரகக் கற்கள் கரைய சிறுகண்பீளை முழுத்தாவரம் 50 கிராம், ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராக சுண்டக் காய்ச்சி, 100 மி.லி. அளவில், காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்யலாம் அல்லது சிறுகண்பீளை முழுத்தாவரம் 50 கிராம், சிறு நெருஞ்சில், மாவிலங்க வேர், பேராமுட்டி வேர் சேர்த்து மொத்தம் 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி, 100 மி.லி.வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குடித்துவர வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்யலாம்.

Comments are closed.