தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய கடலைப்பொடி பூசி என்னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரம்மா புரமேவிய பெம்மான் இவன் அன்றே.
பாவங்களும் வினைகளும் அகல
‘ஹர’ என்றால் பாவங்களைப் போக்குவது எனப் பொருள்
“ஹரஓஹர” என்பதே மருவி தமிழில் ‘அரோகரா’ எனப்படுகிறது.
“அரஹரா” என்று சொல்லிவந்தால் வினைகளும் பாவங்களும் மறையும்.
வினையால் வரும் துன்பம் நீங்க
அவ்வினைக் கிவ்வினையாம்
என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான்
கழல் போற்றுதம் நாமடியோம்
செய்வினை வந்தெமைத்
தீண்டப் பெறா திருநீலகண்டம்
போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரித்தோல்
புறங்காடராங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக் கீழ்
அடர்த்திட்டருள் செய்து அது கருதாய்
வேர்த்தும் புரண்டு விழுந்தும் எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார் புனல் சூழ்அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே
சிவகதியை அளிக்கும் பதிகம்
சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே
மரண பயம் நீங்க
வவ்விய பர்கத்(து) இறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்
கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட
பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும்
போது வெளிநிற்கவே.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!