சிவன் போற்றி

108 சிவன் போற்றி.

ஓம் அரனே போற்றி

ஓம் அருமணியே போற்றி

ஓம் அரும் பொருளே போற்றி

ஓம் அமரர் தம் இறைவா போற்றி

ஓம் அங்கணா போற்றி

ஓம் அனலுருவா போற்றி

ஓம் அருட்பெருஞ் சோதி போற்றி

ஓம் அம்பலக் கூத்தாடி போற்றி

ஓம் அட்ட மூர்த்தி போற்றி

ஓம் அதிகை மூதூர் அரசே போற்றி

 

ஓம் ஆரியனே போற்றி

ஓம் ஆதியந்தம் இல்லாதானே போற்றி

ஓம் ஆறங்க நால்வேத மானவா போற்றி

ஓம் ஆதி புராணனாய் நின்றவா போற்றி

ஓம் ஆனைக் காவலில் அண்ணா போற்றி

ஓம் இறைவனே போற்றி

ஓம் ஈசனே போற்றி

ஓம் உமை கேள்வனே போற்றி

ஓம் எந்தையே போற்றி

ஓம் எம்பிரானே போற்றி

 

ஓம் ஏகாம்பர நாதனே போற்றி

ஓம் ஐயாறமர்ந்த ஐயனே போற்றி

ஓம் கற்றவர்கள் உண்ணும் கனி போற்றி

ஓம் கழலடைந்தார் செல்லும் கதி போற்றி

ஓம் கங்கை சூடி போற்றி

ஓம் கயிலை மயிலானே போற்றி

ஓம் கருகாவூரில் கற்பகமே போற்றி

ஓம் கங்காதரா போற்றி

ஓம் கருணை நாதா போற்றி

ஓம் காண்டற்கரிய கதிரொளி போற்றி

 

ஓம் கானூர் முளைத்த கரும்பு போற்றி

ஓம் குற்றாலத் துறை கூத்தா போற்றி

ஓம் குறைகள் தீர்க்கும் குழகா போற்றி

ஓம் கூத்தபிரானே போற்றி

ஓம் கூற்றுதைத்த கோவே போற்றி

ஓம் கொன்றைச் சடையானே போற்றி

ஓம் சதா சிவா போற்றி

ஓம் சங்கரா போற்றி

ஓம் சதுரா போற்றி

ஓம் செம் பொன்னே போற்றி

 

ஓம் செஞ்சடையானே போற்றி

ஓம் செங்கனகத் தனிக் குன்றே போற்றி

ஓம் சொக்க நாதா போற்றி

ஓம் சோதியனே போற்றி

ஓம் சோற்றுத்துறை அமர்ந்தவனே போற்றி

ஓம் தலைவா போற்றி

ஓம் தத்துவா போற்றி

ஓம் தக்கணா போற்றி

ஓம் தில்லைக் கூத்தா போற்றி

ஓம் திருச்சிற்றம்பலவா போற்றி

 

ஓம் திருநீலகண்டா போற்றி

ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி

ஓம் திருமூலட்டானனே போற்றி

ஓம் திருசூலப் படையுடையாய் போற்றி

ஓம் தூநீறு மெய்க்கணிந்தவா போற்றி

ஓம் தேவ தேவா போற்றி

ஓம் தேவர்க்கும் மூவர்க்கும் முதல்வா போற்றி

ஓம் தேனாரமுதே போற்றி

ஓம் தென்பாண்டி நாட்டானே போற்றி

ஓம் தென்திசை நோக்கிய தெய்வமே போற்றி

 

ஓம் நஞ்சுண்ட கண்டா போற்றி

ஓம் நற்றவா போற்றி

ஓம் நடராசா போற்றி

ஓம் நாதா போற்றி

ஓம் நாரிபாகா போற்றி

ஓம் நிமலா போற்றி

ஓம் நெற்றி மேல் ஒற்றைக் கண்ணடையாய் போற்றி

ஓம் பரனே போற்றி

ஓம் பரமனே போற்றி

ஓம் பரமசிவனே போற்றி

 

ஓம் பரம் பொருளே போற்றி

ஓம் பசுபதி போற்றி

ஓம் பரம யோகி போற்றி

ஓம் பிறப்பிலி போற்றி

ஓம் பிறைசூடி போற்றி

ஓம் பிஞ்ஞகனே போற்றி

ஓம் பிறவி அறுப்பவனே போற்றி

ஓம் புனிதனே போற்றி

ஓம் பூதப்படையானே போற்றி

ஓம் பூவணத்துறை புனிதா போற்றி

 

ஓம் பெம்மானே போற்றி

ஓம் பொன்னார் மேனியனே போற்றி

ஓம் பொங்கரவா போற்றி

ஓம் மழவிடையாய் போற்றி

ஓம் மறை நான்குமானாய் போற்றி

ஓம் மறியேந்து கையானே போற்றி

ஓம் மரகதமே போற்றி

ஓம் மணியே போற்றி

ஓம் மருகலுறை மாணிக்கமே போற்றி

ஓம் மகேசுவரா போற்றி

 

ஓம் மகாதேவா போற்றி

ஓம் மங்கையொரு பங்கா போற்றி

ஓம் மாசற்ற சோதி போற்றி

ஓம் மூர்த்தி போற்றி

ஓம் முதல்வா போற்றி

ஓம் முக்கண்ணா போற்றி

ஓம் முப்புர மெரித்தவா போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வானவர் போற்றும் மருந்தே போற்றி

ஓம் விடமுண்ட கண்டனே போற்றி

 

ஓம் விடையேறு செல்வனே போற்றி

ஓம் விசுவேசுவரனே போற்றி

ஓம் விமலா போற்றி

ஓம் வீரபத்ரா போற்றி

ஓம் விளைவே போற்றி

ஓம் வித்தே போற்றி

ஓம் வேந்தே போற்றி

ஓம் வேதப் பொருளே போற்றி

ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி!

ஓம் எந்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி!!

திருச்சிற்றம்பலம்.

 

108 சிவன் போற்றி பாடி சிவன் அருள் பெறுவோம்.