சிவன் நினைத்தாலே முக்தி தரும் கடவுள். அவரை வணங்க சில பாடல்கள்.
வைத்தியநாதர் வணக்கம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்தநாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சிசெய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சிநல்கும் மாடமாம்
நைந்துவாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைக் கொடுக்கவந்த நீலகண்டன் மந்திரம்
வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வயித்திய நாதனாக வந்துதித்தான் சங்கரன்
பைத்தியமும் பாதகமும் இங்குவந்து சேருமால்
பனிபோல விலகவைக்கும் பரமசிவன் மந்திரம்
தந்தைதாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணையிருக்கும் வீரசேகர் மந்திரம்
புள்ளிருக்கும் வேளுரென புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளிதெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம்
நம்மதையல் நாயகியாள் நாநிலத்தைக் காக்கவே
நங்கையரைத் தங்கையராய்ப் பேணிமிகப் போற்றிட
தம்முடைய குங்குமமும் திருச்சாந்து மண்ணுமே
சந்நிதியில் வழங்குகின்ற சுந்தரேசர் மந்திரம்
பாலனினைப் போற்றிமகிழ் பாலாம்பாள் மகிழவே
வேலனவன் கோலமிகு சீலமுத்துக் குமரனாய்
ஞாலமீது ஞானமுடன் அய்யனடி பற்றியே
மக்கள்குறை தீர்க்கவந்த சொக்கநாதர் மந்திரம்
அர அர சிவ சிவ
அர அர சிவ சிவ அம்பலவாணா
அம்பலவாணா பொன்னம்பலவாணா
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய!
சிவ சிவ சிவ சிவ சிதம்பர நாதா
எங்களை ஆட்கொள்ள இங்கு நீ வாவா
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
சிவாய நமஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சபாபதே
சிவகாமி சுந்தர உமாபதே
அர அர அர அர மஹாதேவா
பார்வதி ரமணா சதாசிவா
நடராஜன் எல்லோருக்கும் நல்லவனே
நல்லதெல்லாம் செய்ய வல்லவனே
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய!
எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான்
அவன் சாம்பசிவன் பக்தன் என்றால் தொடமாட்டான்
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவாய நம ஓம் நமசிவாய (அர அர)
பிரதோசப் பாட்டு
சிவாய நம ஓம் சிவாய நமஹ!
சிவாய நம ஓம் நமச்சிவாய!
ஜெய ஜெய சங்கர அர அர சங்கர!
அர அர சங்கர ஜெய ஜெய சங்கர!
ஆடியபாதா அம்பலவாணா!
கூடியே பாடினோம் பிழை பொறுப்பாயே!
அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!
நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!
சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!
சம்பந்தருக்கு தந்தையானாய் சொக்கேசா!
மண் சுமந்து கூலி கொண்ட சுந்தரேசா!
பெண் சுமந்து பெருமை கொண்டாய் சொக்கேசா!
தோடுடைய செவியோனே சுந்தரேசா!
தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!
நரியை பரியாக்கிய சுந்தரேசா!
நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!
மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!
தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!
கால கால காசிநாதா பாஹிமாம்!
விசாலட்சி சகித விஸ்வநாத ரக்க்ஷமாம்!
ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!
நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!
என்னப் பனல்லவா என் தாயுமல்லவா!
பொன்னப் பனல்லவா பொன்னம்பலத்தவா!
சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்
சிவசிவாய சிவசிவாய சிவசிவாய மந்திரம்
சிவனின் நாமம் சொல்பவர்க்கு சிந்தையெல்லாம் குளிர்ந்திடும்
கணபதியின் தந்தை நாமம் சிவசிவாய மந்திரம்
கந்தனையும் பெற்ற நாமம் சிவசிவாய மந்திரம் (சிவசிவாய)
கையிலிலே ஒலிக்கும் நாமம் சிவசிவாய மந்திரம்
கவலையினை போக்கும் அந்த சிவசிவாய மந்திரம்
அம்மையப்பன் பெயர் ஒலிக்கும் சிவசிவாய மந்திரம்
அன்பு உள்ளம் வரவழைக்கும் சிவசிவாய மந்திரம் (சிவசிவாய)
சொர்ணலிங்கம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
ஜோதிலிங்கம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
அர்த்தநாரி ஈஸ்வரனை சொல்லும் நாமம் மந்திரம்
அனைவருக்கும் அருள்கிடைக்க சொல்லும் நாமம் மந்திரம் (சிவசிவாய)
அருணாசலம் ஆனவன்பேர் சொல்லும் நாமம் மந்திரம்
அண்ணாமலை ஜோதியாகி அருள்வழங்கும் மந்திரம்
பட்டினத்தார் சொல்லியதும் சிவசிவாய மந்திரம்
பக்தர்களைக் காக்கும் அந்த சிவசிவாய மந்திரம்
சொக்கலிங்கம் ஆனவன்பேர் சொல்லும்நாமம் மந்திரம்
சுகமனைத்தும் கொடுப்பதற்கு சொல்லும்நாமம் மந்திரம் (சிவசிவாய)