சீனிவாச இராமானுஜன்

சீனிவாச இராமானுஜன் இந்திய மேதைகளுள் பெருமையும் புகழும் மிக்கவர். கணிதவியலில் இவரது பங்களிப்பு உலகத்தரம் வாய்ந்தது. இவரது கணிதமுறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சில நேரடியாக புரிந்து கொள்ள முடியாதவை.

இராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் 22இல் ஈரோட்டில் பிறந்தார். கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வி பயின்றார். பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஆயினும் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் எஃப்ஏ தேர்வில் கணிதம் தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றார்.

மாணவப் பருவத்திலேயே, லோனியின், முக்கோணவியல், ஜி.எஸ்.கார் எழுதிய ‘தூய கணிதத்தில் அடிப்படை முடிவுகளில் சுருக்கம்’ என்னும் நூல்களை கசடறக் கற்றார்.

திருமணத்திற்குப் பின் இராமானுஜன் 1921இல், மாதம் முப்பது ரூபாய் ஊதியத்தில் சென்னை துறைமுகக் கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகப் பேராசிரியர் வி.எச்.கார்டிக்குத் தாம் நிரூபித்த 120 தேற்றங்களைப் பற்றிய குறிப்புகளை இணைத்துக் கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தைப் படித்த கார்டி, 1917ஆம் ஆண்டு இராமானுஜரை, கணிதவியல் ஆய்வுக்காக இங்கிலாந்திற்கு அழைத்துக் கொண்டார். அங்கு தங்கியிருந்த 4 ஆண்டுகளில் இராமானுஜர் பல கணிதவியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இராமானுஜன் π-யின் மதிப்பைக் கணக்கிடும் வாய்பாடுகளைக் கண்டுபிடித்தார். போர்வின் அவ்வாய்பாட்டைப் பயன்படுத்தி π-யின் மதிப்பை, 17 மில்லியன் தசம இடங்களுக்குக் கணினி மூலம் துல்லியமாகக் கணக்கிட்டார். போலிதீட்டா சார்பு எண்கள் (Mock theta functions) பற்றிய பல தேற்றங்களை நிறுவினார். மாய சதுரங்கள், பகா எண்கள், தொடர் பின்னங்கள் ஆகியவற்றிலும் விற்பன்னராகவே விளங்கினார்.

உடல் நலக்குறைவால் இராமானுஜன் 1920, ஏப்ரல் 26-ஆம் நாள் இயற்கை எய்தினார். இராமானுஜனின் கணித ஆற்றல், ‘இந்தியர்கள் கணிதவியலில் இளைத்தவர்கள் அல்லர்’ என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.

Comments are closed.