சுகாதார புரட்சியின் முதல் விதை எது?
அதற்கு காரணமான நோய் எது?
ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.
கொள்ளை நோய்
இந்த உலகம் கொரோனாவோடு சேர்த்து, பல கொள்ளை நோய்களை கண்டுள்ளது.
அதிக உயிரிழப்புகளையும், அதன் தொடர்ச்சியாக கலாச்சாரம், மொழி, இனம் அனைத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி, சுகாதாரத்தின் மீது புதிய பார்வையை உருவாக்கிய நோய் “பிளாக் டெத்” ஆகும்.
இது பாக்டீரியாவினால் ஏற்பட்ட பிளேக் என்று கருதப்படுகிறது.
13 ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் பிளேக் நோய் பரவிய அதே காலகட்டத்தில் தான், மங்கோலிய படை வீரர்கள் அரண்களால் சூழப்பட்ட “ஜோனோஸ் “நகரை தாக்கினார்கள்.
போரில் பிளேக் நோயினால் பாதிக்கபட்ட மங்கோலிய படை பின்வாங்கியது. ஆனால் கொள்ளை நோயால் இறந்தவர்களை, மிகப்பெரிய மரங்களில் கட்டி கோட்டைக்குள் எறிந்தனர்.
இதனால் அந்த வியாபார நகரம் முழுவதும் நோயினால் பாதிக்கபட்டது. இந்நோய் பரவிய இரண்டு வருடத்தில் 3 கோடி மக்கள் பலியானார்கள்.
மூடநம்பிக்கை
இந்த பலியைக் கூட்டியதற்கு முக்கிய காரணம் மதம் சார்ந்த மூடநம்பிக்கை.
இந்நோய் கடவுளால் அனுப்பப்பட்டது என நம்பிய மக்கள் கடவுளின் தண்டனை என இதனை ஏற்று கொண்டனர்.
இதன் மூலம் பரலோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இந்த நோய் பரவ காரணமாயிற்று.
சிலர் இந்த நோய் பூனைகளாலும், நாய்களாலும் வந்தது எனக் கருதி அவற்றை கொன்று குவித்தனர்.
ஆனால் நோய் பரவக் காரணமான எலிகள் பத்திரமாக உலாவின.
மூடநம்பிக்கை உச்சத்தை அடைந்தது. மந்திரம் மற்றும் தைலங்கள் மூலம் நோயை விரட்ட முயன்றனர். கையை வெட்டி ரத்தத்தை வெளியேற்றினால் நோய் குணமாகும் எனக் கருதினர்.
தங்களைத் தாங்களே பிரம்புகளால் அடித்து கொண்டால், கடவுளின் கோபம் தீரும் என்றும் நம்பினர்.
முதல் உலகப்போரில் போரிட்டு மாண்டது 4 கோடி எனில், பிளாக் நோயில் மாண்டவர்கள் 10 கோடி.
ஆனால் ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கை கைவிட்டதை பாதிக்கபட்டோர் உணர்ந்தனர்.
பிளாக் டெத் அரசியல், சமூக மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. பிரிட்டனில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இறந்து போனதால், ஆங்கிலம் கற்பிக்கபட்டது.
தேவாலயங்கள் சீர்திருத்த மையங்களாயின. கலை, இலக்கியம் அனைத்தும் புதிய வடிவம் எடுத்தன.
அறிவியல் அணுகுமுறை
இன்றைய சுகாதார புரட்சியின் முதல் விதை பிளாக் டெத்தில் இருந்தே துவங்கியது.
இந்த கொள்ளை நோய் மறைந்த போது வெனீஸ்,பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
பின்பு 1894 ல் பிரஞ்சு விஞ்ஞானி அலெக்சான்ரி எர்சின் மற்றும் பால் லூயி “பிளாக் டெத்திற்கு “எலிகள்தான் காரணம் என்பதையும், நோயிற்கு மருந்தையும் கண்டறிந்தனர்.
இதை குறித்து அதிக ஆய்வு செய்து, ஜேக்குலின் மற்றும் அன்ரி எழுதிய பிரெஞ்சு ஆய்வு நூலின் பெயர் “ஏன் இந்த கொள்ளை நோய்?”
அதன் இறுதி வரிகள் இவை.
கொள்ளை நோய் இடைக்காலத்தில் வந்த நோய் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் வரக்கூடிய ஒரு நோய். அதை எதிர்கொள்ள மனித சமுதாயத்திற்கு அறிவியல் அணுகுமுறையே தேவை.
முனைவர் ஜி.சத்தியபாலன்
உதவி பேராசிரியர்
மதுரை மருத்துவக் கல்லூரி
Very useful message
நோய்கள் மருந்திற்கு கட்டுப்படுமேயன்றி மதத்திற்கு கட்டுப்படா என்பதை அருமையாக சொன்னீர்கள்