தொன்மையில் இருந்த
பிடிமானமற்ற வானவெளியிலிருந்து
மழைத்துளிகள் இட்ட முத்தங்களால்
வெள்ளமெனப் பாய்ந்து
பெருமிதம் கொண்டது பூமியின்
கருவறை மனம்…
தாவர வேர்களை நனைத்தது போல்
உயிர் வேரை நனைத்ததில்
அன்றலர்ந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது பிரமாண்டம்…
முட்டையின் புறத்தில் நின்று
அகத்துள் புக
எத்தனிக்கும் ஆதியின் கதவு திறக்க
முயன்று தோற்காமல் தொடருகிறது
ஜனனம்….
அரூப வெளியில்
ரூபகங்ளைச் சுமந்து சுற்றி
முனை காண முயன்று தோற்ற போது
முளைத்து அரும்புகிறது வெற்றியின் நுனி…
வெல்லுவதாய் விரிந்து
துவளும் இயலாமையின் நகர்தல்
காற்றும் ஒளியாயும்
இருளில் மின்னுகின்றன நட்சந்திரங்கள்…
சுழலுவதில்
கைப்பிடித்து தொடரும்
அறிதலும் அறியாமையும்….
பகரருதலில்
பங்களிப்பானின்றி அன்னோன்யமாய்
பிணைந்து அடர்த்தியற்று
தளறும் இறுக்கத்தில் முட்டி மோதுகிறது
ஆரம்பம் தெரியா துவக்கதின் முதல்…
சொல்லி முடியாமல்
விரிந்து சுகந்து கிடக்கிறது
பிரபஞ்சம்…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
மறுமொழி இடவும்