சுக்குக் காப்பி / சுக்காப்பி போடுவது எப்படி?

சுக்குக் காப்பி மழை மற்றும் பனிகாலங்களில் சூடாக குடிக்க தொண்டைக்கு இதமாகவும், உடல்நலத்திற்கு சிறந்தாகவும் இருக்கிறது.

பொதுவாக மழை மற்றும் பனி காலங்களில் அனைவருக்கும் ஜலதோசம் பிடித்து வாட்டும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஜலதோசத்தால் மூக்கில் நீர் வடிந்தவாறு இருக்க நேரிடும்.

இதனால் இரவில் தூக்கம் என்பது பெரும் போராட்டமாகவே இருக்கும். இத்தொந்தவுகளுக்கு எல்லாம் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயார் செய்த சுக்குக்காப்பி சரியான நிவாரணம் அளிக்கிறது.

சுக்குத் தண்ணீர், சுக்கு மல்லிக் காப்பி, சுக்கு நீர் என்றெல்லாம் சுக்குக் காப்பி அழைக்கப்படுகிறது. இனி சுக்குக் காப்பி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

சுக்குக் காப்பிப் பொடிக்கு தேவையான பொருட்கள்

 

சுக்கு – 50 கிராம்

கொத்த மல்லி விதை – 150 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

திப்பிலி
திப்பிலி

 

சித்தரத்தை – 10 கிராம்

சித்தரத்தை
சித்தரத்தை

 

சதகுப்பை – 10 கிராம்

சதகுப்பை
சதகுப்பை

 

பனை வெல்லம் – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் வெறும் வாணலியில் கொத்த மல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, சதகுப்பை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆற வைக்கவும்.

கொத்த மல்லி விதை வறுக்கும் போது
கொத்த மல்லி விதை வறுக்கும் போது

 

சுக்கு வறுக்கும் போது
சுக்கு வறுக்கும் போது

 

மிளகு வறுக்கும் போது
மிளகு வறுக்கும் போது

 

திப்பிலி வறுக்கும் போது
திப்பிலி வறுக்கும் போது

 

சித்தரத்தை வறுக்கும் போது
சித்தரத்தை வறுக்கும் போது

 

சதகுப்பை வறுக்கும் போது
சதகுப்பை வறுக்கும் போது

 

பின் கொத்த மல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, சதகுப்பை ஆகியவற்றை தனித்தனியே மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

பின் அரைத்த எல்லாவற்றையும் ஒரு சேரக் கலக்கவும். சுக்குக் காப்பிப் பொடி தயார்.

சுக்குக் காப்பிப் பொடி
சுக்குக் காப்பிப் பொடி

 

இதனை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

 

சுக்குக் காப்பி தயார் செய்யும் முறை

தேவையான நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் மேலே குறிப்பிட்டுள்ள முறையில் தயார் செய்யப்பட்டுள்ள காப்பிப் பொடியில் இரண்டு தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

சுக்குக் காப்பி கொதிக்கும் போது
சுக்குக் காப்பி கொதிக்கும் போது

 

பின் இறக்கி வடிகட்டவும். சுவையான மணமான சுக்குக் காப்பி தயார்.

சுவையான‌ சுக்குக் காப்பி
சுவையான‌ சுக்குக் காப்பி

 

இக்காப்பி சளித் தொந்தரவு, இருமல், ஜலதோசம், காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்தது. மேலும் இது ஜீரணச்சக்தியையும் சீராக்குகிறது.

குறிப்பு

சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.