சுட்டிடும் வெய்யிலில்…

சுட்டிடும் வெய்யிலில் தலையும் சுற்றுதே

நட்டம ரமெல்லாம் கட்டிடம் ஆனதே

பட்டுதான் போகுதே பயிர்கள் வாடுதே

தட்டுப் பாடுதான் நீர்நிலை காணலே

கட்டுக் கட்டாய் காசுகள் தந்திட

பெட்டி அடுக்காய் வீடுகள் வந்ததே

பட்டுமாய் புத்தி இன்னமும் மாறலை

திட்டமி டுயினி இயற்கையாய் வாழ்ந்திட

கிட்டிடும் வளங்கள் தென்றலாய் வீசுமே…

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்