சுத்தம்

தேனீக்கள் குடித்து மிகுந்து எச்சிலான தேன் சுத்தம் உள்ளதே. அபிஷேகத்திற்கு ஏற்றதே.

தீட்டுள்ள ப்ராமணர், சவரம் செய்து கொண்டவர், தூரமான ஸ்திரீ, காக்கை, கழுதை, நாய் இவைகள் மேல் பட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

பட்டு என்பது ஒரு வகை புழுவை ஹிம்சித்து உண்டாவதானாலும் அது சுத்தம். கன்று எச்சில் ஊட்டிய பாலும் சுத்தம்.

பத்தினிக்குத் தெரியாமல் தானதர்மம் செய்தால் பயனில்லை. பதியின் (கணவன்) அனுமதியின்றி விரதமிருந்தால் கணவனுக்கு ஆயுள் குறையும்.

கற்பும், பக்தியும் கணவன் ஆயுளை வளர்க்கும்.

வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். தீய சக்தி, விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.