தண்ணீர்க் கடலே நீ ஏன் மக்களின்
கண்ணீர்க் கடலானாய் கருஞாயிறில்
காலடியில் சரணடைந்து வேண்டியோரைக்
காலனாய் கவர்ந்தாயே ஏன்?
காற்று கடிதாய் வீசவில்லை வானிலையில்
மாற்றம் பெரியதாய்த் தெரியவில்லை திடீரெனக்
கூற்றாய் வந்தாய் நீ அழைத்துச் சென்றாய்
சுற்றம் சூழ எல்லோரையும்
மாந்தர்தம் மனதில்தான் இப்போது
மருந்துக்குக் கூட இருக்கவில்லை ஈரம்
எப்போதும் நீர் சூழ இருக்கும் கடல் தாயே
நீயும் ஈரம் தொலைத்தது தான் கோரம்
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!