சுனாமி என்பது மிக நீளமான அலை நீளத்துடன் கடலில் ஏற்படும் தொடர்ச்சியான அலைகள் ஆகும். இதன் அலைநீளம் 10 முதல் 100 கி.மீ வரை இருக்கும்.
டிசம்பர் 26, 2004-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமிகளின் தாக்கத்தினால் 3,00,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இவை கடலின் மேற்பகுதியிலோ அல்லது அடிப்பகுதியிலோ எற்படும் இயற்பியல் மாற்றங்களினால் உண்டாகின்றன. இவை பொதுவாக நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடலடி நிலச்சரிவு ஆகியவற்றால் கடலில் தோன்றுகின்றன.
இவ்வலைகள் 15 மீட்டர் அல்லது அதற்கு மேலும் உயரத்தைக் கொண்டிருக்கும்.
கடல் அல்லது பெருங்கடல்களில் நிலநடுக்கம் ஏற்படும் போது அலைகள் பல மீட்டர்கள் வரை உயர்ந்து சில நிமிடங்களில் கடற்கரையை அடையலாம்.
மிகப்பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு பல மணி நேரங்களுக்கு சுனாமி தோன்றுவதற்கான அபாயம் இருக்கக் கூடும்.
சுனாமி என்ற சொல் ஜப்பானிய மொழியில் இருந்து வந்தது. ‘சு’ என்பதற்கு துறைமுகம் என்றும் ‘நாமி’ என்பதற்கு அலைகள் என்றும் பொருள்.
சுனாமி அலைகள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் பெற்றவை. இவைகள் கண்டங்களை நெருங்கும் போது அவற்றின் வேகம் அதிகரிக்கும்.
நெருப்பு வளையம் என்று சொல்லக் கூடிய பசிபிக் பெருங்கடல் பகுதிகள் சுனாமியால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
டிசம்பர் 26, 2004-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமிகளின் தாக்கத்தினால் 3,00,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்த சுனாமியால் ஏற்பட்ட மனஅழுத்தம், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகளின் அளவினைக் கணக்கிட முடியாது. பலகிராமங்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலும் பாதிப்படைந்தது.
கடந்த 40 வருடங்களில் ஏற்பட்ட சுனாமிகளில் இதுவே பெரியது. ஒரே இரவில் நிகழ்ந்த இந்தப் பேரிழப்பை எவராலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.
பேரிடர் தணித்தல்
சுனாமி ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நம்மை சுனாமியிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. எச்சரிக்கை மையத்திலிருந்து வரும் தகவல்களை கேட்டு அறிய வேண்டும்.
எச்சரிக்கையினைத் தொடர்ந்து உடனடியாக மக்கள் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும்.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக் கூடாது.
முதலில் உருவான அலை மட்டுமே பயங்கரமானதாக இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அதைத் தொடர்ந்து வரும் அலைகளும் அபாயகரமானவைகளாகவே இருக்கும்.
மக்கள் அதிகம் வசிக்கும் கடற் கரையை ஒட்டிய இடங்களில் மிக உயரமான தடுப்பு சுவர்களும், சுனாமியால் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதிகளுக்கு வரும் நீரினை வெளியேற்றுவதற்கான பாதைகளும் தற்போது அமைக்கப்படுகின்றன.
கடற்கரையை ஒட்டிய இடங்களில் அதற்கேற்ற மரங்களை (பனை, தென்னை) வளர்த்து குறைந்த செலவில் சுனாமிக்கான இயற்கைத் தடுப்பு சுவரை உண்டாக்கலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!