சுழலும் காற்றின் துகளாக
தொலைவினில் நானும் விழுந்தெழுந்தேன்
எழுந்த எந்தன் கால் வழியே
விலகும்புவியை நான் உணர்ந்தேன்
அலைகளில் மிதந்த துளியாக
அகமும் புறமும் அலைந்திரிந்தேன்
தெளிந்த அந்தச் சிறுபொழுதில்
அடர்ந்த இருளை நான் உணர்ந்தேன்
தொலைந்து போன இரவுகளில்
தொலைத்ததை விடியலில் காணுகிறேன்
விடியலில் கண்ட விளைவுகளோ
விஷம்போல் இருப்பதை நான் உணர்ந்தேன்
விடியலை தழுவிட வேண்டுமென
விரித்த சிறகுடன் காத்திருந்தேன்
விரிந்த சிறகுகள் வழியாக
குருதிகள் வழிவதை நான் உணர்ந்தேன்
குருதிக்குளத்தின் பூவாக
பூத்தே சிரித்துக் களித்திருந்தேன்
கனிந்த மனதால் சுமைகளையே
சுமப்பதில் இன்பம் என உணர்ந்தேன்
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்