தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது
தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…
முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்
அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…
வனப்பாய் படமெடுத்து வலைதளத்தில் பதிவிட்டோம்
பிணைப்பாய் இருப்பதுபோல் இணையத்தில் பதிவேற்றினர்…
பிணைப்பின் படத்தை இணையத்தில் கண்டதும்
இதயத்தில் இடியொன்று இடராய் வீழ்ந்தது…
சுயமியும் வேகத்தில் சுனாமி என்பதை
சுயமிழக்கும் வேளைதான் சுட்டிக் காட்டியது…
சுயமியெனும் குளத்தில் புலியும் மானும்
புரிதலெனும் பெயரில் ஒன்றாகவே நீரருந்துகின்றன…
இங்கு யார் யாரைவேண்டுமானாலும் வேட்டையாடலாம்
வேட்டையில் வீழ்வது மானோ புலியோ
இழப்பது மட்டும் தன்சுயம் மட்டுமே…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!