கிராமங்களில் உயர்ந்த மேடை, விரிந்த அரசமரம், அதனடியில் பிள்ளையார்…
நடுத்தரமான ஊர்களில் நீண்ட பட்டியக்கற்கள்; அதில் ஆடுபுலியாட்டம், தாயம் விளையாட வரையப்பட்ட கட்டங்கள்…
நகரங்களிலோ தெருக்களில் சாவடிகள்…
என வயது முதிர்ந்தோர் வாழ்க்கைக்கான வசந்த மண்டபங்கள்.
இன்று பெரும்பாலும் இவை டாஸ்மாக் சரக்குடன் கூடும் பொது இடங்களாக …(மூத்த வயதினரோ முதியோர் இல்லங்களில்) நாகரீக உலகில் மாறிப்போனது.
பொதுவாக மக்கள் கூடும் இடங்கள் சுருங்க சுருங்க மானுட நேயமும் சுருங்கத்தானே செய்யும்?