அ.சதிஷ்ணா அவர்களின் நான்கு சிறிய கவிதைகள் இங்கே உள்ளன. படித்து ரசியுங்கள்.
அடைமழைதனிலே
நிலவொளிதனில் பெய்த மழையே
மனவொளிதனில் பொய்த்த மணியே
உனதரிய நினைவுகள் எல்லாம்
எனதுள்ளே இடிகளாக இடிக்க
உடைந்தேன் நான் அடைமழைதனிலே!
கானல் நீராய்
கண்களின் தேடலால் கிடைத்த முத்து நீ
காண அரிதான கானல் நீராய்
கலைந்து சென்றாயே?
உறைகண்
உறக்கமில்லா உருகிய கண்கள்
உறங்கவுமில்லை உருகவுமில்லை
மாறாக
உறைந்து கொண்டிருக்கின்றன!
சுவாசம் கொள்
அச்சம் விடு உச்சம் எட்டு!
எழுந்து ஓடு ஏற்றம் எடு!
உண்மை தேடு உயர்வு தொடு!
உலகம் உன் வசம்!
சுவாசம் கொள்!
அ.சதிஷ்ணா
8438574188
சிறப்பு தோழர்