மென்பொருள் உருவாக்குபவர்கள் பார்க்க வேண்டிய செயற்கை நுண்ணறிவு பற்றிய திரைப்படங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு எங்கும் பேசப்பட்டு வருகிறது. அது மனித குலத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது
இத்தகைய சூழ்நிலையில், மென்பொருள் உருவாக்குபவர்கள் (developers), தங்கள் திறமைகளைக் கூர்மைப்படுத்திக் கொள்வதற்காக, கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஐந்து ஆங்கில திரைப்படங்களைப் பரிந்துரைக்கிறேன். அவை
பிளேட் ரன்னர் (Blade Runner) – 1982
இந்த திரைப்படம், செயற்கை நுண்ணறிவின் விளைவுகளை விவரித்தது.
எக்ஸ் மசினா (Ex Machina) – 2014
ஓர் இளம் புரொக்ராமர், அதிநவீன ஹ்யுமனாய்ட் ஏஐ என்பதை பாடுபட்டு உருவாக்கி அதனுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு குறித்தும் மனிதர்கள், இயந்திரங்கள் இடையேயான தொடர்பு குறித்தும் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பேசுகிறது. ஏஐ/மெஷின் லேர்னிங் ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம்.
ஹெர் (Her) – 2013
மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே உள்ள உறவுகளை அழகாக வெளிப்படுத்திய திரைப்படம்.
உணர்ச்சி சார்ந்த அறிவு என்கிற emotional intelligence க்கும் செயற்கை நுண்ணறிவின் அமைப்புகளுக்கும் ஏற்படும் உறவு பற்றிய கேள்விகளை முன் வைத்த இந்த படம், டெவலப்பர்ஸ், கற்றுக் கொள்ள உதவும்.
ஆர்டிஃபிசல் இன்டெலிஜென்ட் (AI Artificial intelligent) – 2001
இந்த படத்தின் இயக்குநர் – ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஆம். இந்த இயக்குநர் உங்களுக்கு தெரிந்த இயக்குநர் தான்.
ஸ்பீல்பெர்க், ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) எழுதிய புதினத்தை தழுவி இந்த படத்தை எடுத்தார்.
வருங்காலத்தில் ஏ.ஐ. மற்றும் ரோபோக்கள் மக்கள் இடையே ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த செலுலாய்ட் பதிவு.
டிரான்சென்டென்ஸ் (Transcendence) – 2014
இந்த திரைப்புனைவில் ஓர் அறிவியலாளர் தமது consciousness என்னும் உள்மனத்தை கம்ப்யூட்டரில் பதிவு ஏற்றம் செய்ய, அதுவே வலிமை மிக்க ஏஐ ஆக மாறி விடுகிறது.
ஏஐ-ன் வருங்கால மாற்றங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்து.
எஸ். மதுரகவி
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com