புஜை முடிந்த பின் தீபத்தை ஆடவர் அணைக்கக் கூடாது.
திருஷ்டிப் பூசணிக்காயைப் பெண்கள் உடைக்கக் கூடாது.
அன்னம், நெய், உப்பு இவற்றை கையால் பரிமாறுதல் கூடாது.
ஒரே சமயத்தில் தனது இருகைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.
இரவில் துணி துவைக்கக் கூடாது, குப்பையை வெளியில் கொட்டவும் கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது, இரகசியம் பேசக் கூடாது.
மாலை 6.00 மணிக்கு சாப்பாடு, தூக்கம் கூடாது.
ஆயுள், பொருள், வீட்டுப் பிரச்சனை, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் ஆகிய எட்டும் பிறருக்குத் தெரியக் கூடாது.
தீபாவளி தவிர பிறநாளில் அதிகாலை எண்ணெய் தேய்க்கக் கூடாது.
தோளில் துண்டு போட்டுக்கொண்டு ஜபம், பிரதட்சணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்தல் கூடாது.
இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்கு செல்லக் கூடாது.
சாமிக்கு நிவேதனம் ஆகும் சமயம் பார்க்கக் கூடாது.
சுவாமி சிலைகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றக் கூடாது.
சாலையில் செல்லும்போது தம்பதிகளுக்கு இடையில் போகக் கூடாது. தேவதை, பலிபீடம் இவற்றின் நடுவே செல்லுதல் கூடாது. குரு சீடனுக்கு இடையில் செல்லக் கூடாது. சிவலிங்கம் நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது.
திருக்குளத்தில் கல்லைப் போடக் கூடாது.
திருக்கோயிலை வேக வேகமாக வலம் வரக் கூடாது.
இவை நாம் செய்யக்கூடாதவைகள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!