என் பொழுதுகள்
நீயின்றி விடிவதில்லை
என் இரவுகள்
உனை காணாமல் கடப்பதில்லை
உன் துணையின்றி
செல்ல விருப்பமில்லை
சென்றாலும் உன் நினைவுகள்
என்னை விடுவதில்லை
படுக்கையிலும் என் பக்கத்தில்
நீ இருக்க மனம் விரும்பும்
நித்தமும் நீ என்னோடு
ஒரு போதும் சலிப்பதில்லை
என் தனிமையில்
துணையாய் இருக்கிறாய்
நான் பேசும் போதெல்லாம்
அமைதியாய் கேட்டுக் கொள்கிறாய்
குழந்தை முதல் பெரியவர் வரை
உன்னை விரும்பாத ஆளில்லை
என் வெறுமையை
வானவில்லாய் நிரப்புகிறாய்
தொடும் போதெல்லாம் மலருகின்றாய்
வண்ணமயமாய் ஒளிர்கின்றாய்
காதலா போதையா தெரியவில்லை
நீ இல்லாமல் இருக்க முடியவில்லை
விட்டு விலகிச் சென்றாலும்
செல்லமாய் சிணுங்கியே ஈர்க்கின்றாய்
இதற்கு மேல் உன்னை வர்ணிக்க
இவளுக்கு தெரியவில்லை
என் அன்பு கைபேசியே…
இப்படிக்கு இவள்,
ஜெயஸ்ரீ
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!