ஆடும் தூளியில்
ஒய்யாரமாய் உறங்கும் மகள்
அம்மாவின் புடவை
விரசாய் நட
உச்சிகால பூஜை
கோடை விடுமுறை
எத்தனை அழகு
எவ்வளவு அமைதி
மயானச் சாலை
நாய்கள் அணிவகுப்பு
பேய்கள் தொடர்ந்து வருமோ
நள்ளிரவுப் பாதை
தப்பிய எலி
குதித்து ஆடியது
பதுங்கிய பூனை
-செல்லம்பாலா, சென்னை.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!