சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?

சேப்பங்கிழங்கு சிப்ஸ் திருமணம் போன்ற விருந்துகளில் இடம் பெறும் உணவு வகையாகும். இதனை நாமும் வீட்டில் எளிதான முறையில்  தயார் செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் அசத்தலாம்.

இனி சுவையான சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு சிப்ஸ் – ½ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 2 எண்ணிக்கையில்

எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு

 

தாளிக்க

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கீற்று

 

மசால் தயார் செய்ய

கொத்தமல்லிப் பொடி – 1 ஸ்பூன்

வத்தல் பொடி – ¾ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின் அதனை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

 

சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு

 

வேக வைத்த சேப்பங்கிழங்கு
வேக வைத்த சேப்பங்கிழங்கு

 

வெட்டி வைத்த சேப்பங்கிழங்கு
வெட்டி வைத்த சேப்பங்கிழங்கு

 

சின்ன வெங்காயம் இரண்டை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும். கொத்த மல்லிப்பொடி, வத்தல் பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மசால் தயார் செய்யவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்குத் துண்டுகளை எண்ணெயில் போடவும். கிழங்குத் துண்டுகள் சிவந்ததும் எடுத்து விடவும்.

 

சிவந்த சேப்பங்கிழங்கு துண்டுகள் மற்றும் மசால்
சிவந்த சேப்பங்கிழங்கு துண்டுகள் மற்றும் மசால்

 

வேறு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் அதில் ஒன்றிரண்டாக தட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்க்கவும்.வெங்காயம் சற்று வதங்கியதும் மசாலாவைச் சேர்க்கவும்.

 

எண்ணெயில் மசால் கலவை கலந்ததும்
எண்ணெயில் மசால் கலவை கலந்ததும்

 

பின் அதில் வறுத்து வைத்துள்ள கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கவும்.

 

சேப்பங்கிழங்கு துண்டுகளை வறுக்கும்போது
சேப்பங்கிழங்கு துண்டுகளை வறுக்கும்போது

 

சேப்பங்கிழங்கு சிப்ஸ் தயார்
சேப்பங் கிழங்கு சிப்ஸ் தயார்

 

சுவையான சேப்பங்கிழங்கு சிப்ஸ் தயார். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வறுத்த கிழங்குத் துண்டுகளுடன் உப்புமும், மிளகுத்தூள் அல்லது மிளகாய் தூள் தூவிச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு வறுத்த கிழங்குத் துண்டுகளுடன் கொடுக்க விரும்புபவர்கள் வெறும் உப்புத் தூளை மட்டும் தூவிக் கொடுக்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்