சேமியா கேசரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சேமியா : 500 கிராம்
சர்க்கரை : 400 கிராம்
தண்ணீர் : 400 மி.லி.
நெய் : தேவையான அளவு
முந்திரி பருப்பு : 2 (தேவையான அளவு)
ஏலக்காய் : 4 (தேவையான அளவு)
கேசரி பவுடர் : சிறிதளவு

 

செய்முறை

சேமியா, முந்திரிப்பருப்பு தனித்தனியாக நெய்யில் வறுக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் சேமியா போட்டு கிளறி வேகவிடவும்.

சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து முந்திரிபருப்பு, மீதியுள்ள நெய், கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும். பிறகு ஏலப்பொடி சேர்க்கவும்.

பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.