சேர்கிற சிரிப்பு!

சட்டைப்பையில் துழாவியெடுத்த

சில்லறையை மட்டும் தான் அப்பா

குழந்தையிடம் கொடுக்கிறார்…

ஏனோ பிச்சைக்காரரின் கையில்

தருகிற சில்லறையோடு

கொஞ்சம் ஆசுவாசமான சிரிப்பையும்

சேர்த்து விடுகிறது குழந்தை!

ச. குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com