காலாற காளைகள் நடக்க
காற்றும் வந்து மெல்ல தழுவ
ஊரெங்கும் கூரை கடைகள் இருக்க
அவித்த உணவு பண்டமே கிடைக்க
காப்பினா சுக்கு காப்பி தான் என்றிருந்த காலம்
கிராமங்கள் சொர்க்கமாக இருந்த காலம்!
இவையெல்லாம் அனுபவிக்க இயலாத
எதிர்கால தலைமுறைக்கு
இவற்றிக்கு ஈடாக தருவதற்கு ஒன்றுமில்லை!
குறைந்த பட்சம் துரித உணவுகளையும்
தொல்லை தரும் பொரித்த உணவுகளையும்
நெகிழியில் அடைபட்ட குளிர்பானங்களையும்
தொடாதிருக்க கற்றுக்கொடுத்தல் நலம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!