சொர்க்கம் தேடி போனதுண்டு
சுகமாய் வாழ்ந்த காலமுண்டு
அப்பப்பா என்ன சொல்ல
அதைத்தேடி எங்கு செல்ல?
பள்ளிக்கூடம் படிக்க மட்டும்
பாட்டி வீடு டவுனுக்குள்ள
உள்ளபடி உசுரெல்லாம்
ஊசலாடும் கிராமத்துல
தட்டாஞ்ச்செடி தலையாட்டும்
தாகம் தீர்க்க ஆறு இருக்கும்
எட்டா உசரத்துல மரம்
இருந்தாலும் கனி கொடுக்கும்
மாப்பிள்ளை நீ எப்ப வந்த
மாமாக்கு என்ன கொண்டு வந்த
வெத்திலை வாய் சிவப்புலதான்
வக்கனையா பாசம் வரும்
இப்படித்தான் இருந்த ஊர்.
எப்படியோ அழிஞ்சிருச்சு
தப்பாக போயிருச்சு
தரிசாக ஆயிருச்சு
வெட்டரிவாள் கையிலேந்தி
காவலிருந்த அய்யனரு
கட்டிவச்ச கோட்டையுமே
.களாவாக போயிருச்சே!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!