விருதுநகர் மாவட்டம் முகவூர் மாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கலுக்கு சிறுவர்கள் வேசம் போட்டு வீடு வீடாகச் சென்று காணிக்கை வாங்கி கோவிலில் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் பாடும் பாட்டு இது.
சோக்கு சொக்கத்தா
சொக்கமில்லை ரெண்டத்தா
ஆத்தாத்தா பெரியாத்தா
ஐஞ்சாறு பிள்ளைய பெத்தாத்தா
எனக்கு இரண்டு போடாத்தா
நண்டுடோ நண்டு
செங்குளத்து நண்டு
அங்கு இங்கு ஓடிவரும்
அழகான நண்டு
பேச்சியாத்தா கொம்பம்
பேத்து பேத்து தின்போம்
மாரியாத்தா கொம்பம்
மாவு இடிச்சு தின்போம்
காளியாத்தா கொம்பம்
களிக்கிண்டித் தின்போம்
மாரியாத்தாளுக்கு படிபோடுங்க!
மறுமொழி இடவும்