ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி : 200 கிராம்
சீனி : 300 கிராம்
தண்ணீர் : 500 மி.லி.
தேங்காய் : 2 மூடி (துருவி பால் எடுக்கவும்)
முந்திரிபருப்பு : தேவையான அளவு
ஏலக்காய் : தேவையான அளவு

 

செய்முறை

அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

ஜவ்வரிசி வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.

நெய்யில் முந்தரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போடவும். சுவையான ஜவ்வரிசி பாயசம் தயார். சூடாக பரிமாறவும்.