ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) பிச்சைக்காரர்களுடனும் நடைபாதைவாசிகளுடனும் வாழ்ந்த ஓர் எழுத்தாளர்.

இவருடைய இயற்பெயர் – எரிக் ஆர்தர் பிளைர். ஆர்வெல் என்னும் ஆறு, இவரை மிகவும் கவர்ந்ததால், இந்த பெயரில் எழுதத் தொடங்கினார். இவருடைய புத்தகங்கள் விவாதங்களைத் தூண்டியவை.

உளவுத்துறை அதிகாரிகள் பிச்சைக்காரர்கள் போல் வேடம் தரித்து மக்களிடையே இருப்பதாக திரைப்படங்களில் காண்பிப்பார்கள்.

உளவுத்துறையில் பணிபுரிபவர்கள், நம்முடன் ரயிலில் /பேருந்துகளில் உடன் பயணித்து மக்கள் எண்ண ஓட்டத்தை அறிவார்கள் என்று கூறப்படுவதுண்டு.

ஆர்வெல், அன்றைய பர்மா (இன்றைய மியான்மர்) வரை வந்து, அன்றைய இந்திய இம்பீரியல் போலீசில் சில காலம் பணியாற்றியவர்.

இவர் தமது அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாமல், கிழிந்த உடைகளுடன் பாரீஸ் நகரில் அடித்தட்டு மக்கள் வாழ்விடங்களில் அவர்களுடனும் பிச்சைக்காரர்களுடனும் வாழ்ந்து வந்தார்.

அவ்வாறாக தாம் பெற்ற அனுபவங்களை ‘Down and out in Paris and London’ என்கிற தலைப்பிலான புத்தகமாக எழுதினார். இந்த நூல் பல விருகளைப் பெற்றது.

இவருடைய புகழ் பெற்ற நூல் அனிமல் ஃபார்ம். இந்த நூல், விலங்கு பண்ணை என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இந்த நூலின் மூல கையெழுத்துப் படிவம், குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்த ஒன்று. ஆம். இவர் வாழ்ந்த நகரிலும் வீடு உள்ள இடத்திலும் ஜெர்மானியர்கள் குண்டு வீசினர்.

வீட்டில் இல்லாததால் தப்பித்த ஆர்வெல்லும் அவருடைய மகனும் இடிபாடுகளில் தேடிய போது இந்த நூலின் கையெழுத்துப் படிவம் அவர்கள் கைகளில் கிடைத்தது.

எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com