டயமண்ட் கேக்

டயமண்ட் கேக் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

முட்டை: 1

சீனி :100 கிராம்

சோடா உப்பு: 1 சிட்டிகை

மைதா மாவு: ¼ கிலோ

நெய்: சிறிதளவு

எண்ணெய் : பொரித்தெடுக்க தேவையான அளவு

 

செய்முறை

டயமண்ட் கேக் செய்வதற்கு முதலில் முட்டை, சீனி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு அடிக்கவும்.

பின் கலவையில் மைதா மாவைப் போட்டு சோடா உப்பையும் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். அதில் தண்ணீர் சேர்க்கக் கூடாது.

மாவு ஒட்டாத வரை நன்கு பிசைய வேண்டும். பின் அதை நெய் தடவிய தட்டில் கொட்டி பூரிக் கட்டையால் விரித்து விட வேண்டும்.

கத்தியால் சிறிய சிறிய சதுரங்களாக வெட்ட வேண்டும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து வெட்டிய சதுரங்களை போட்டு சிறு தீயில் வெந்த உடன் எடுத்து விடவும். சுவையான டயமண்ட் கேக் தயார்.

– பிரபாவதி