இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 இந்திய பணக்காரர்கள் 2019 பற்றிப் பார்ப்போம்.
டாப் 10 இந்திய பணக்காரர்கள் 2019
1. முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
62 வயதாகும் இவரின் சொத்து மதிப்புக்கள் 51.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இவரின் செல்வ வளத்திற்கு எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு, பெட்ரோகெமிக்கல் ஆகிய துறைகள் ஆகும்.
2. கௌதம் அதானி
கௌதம் அதானி இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில், 15.7 பில்லியன் டாலர்கள் கொண்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
57 வயதாகும் இவர் பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் துறைகள் மூலம் இவர் இவ்விடத்தைப் பிடித்துள்ளார்.
3. இந்துஜா சகோதரர்கள்
எஸ்.பி.இந்துஜா
இந்துஜா சகோதரர்கள் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
இவர்களின் சொத்து மதிப்பு 15.6 பில்லியன் டாலர்கள் ஆகும். இவர்கள் பல்வேறு தொழில்கள் மூலம் இச்சாதனையைச் செய்துள்ளனர்.
4. பல்லோன்ஜி மிஸ்திரி
பல்லோன்ஜி மிஸ்திரி
பல்லோன்ஸி மிஸ்திரி 15 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினைக் கொண்டு இந்திய பணக்காரர்கள் பட்டியலில் நான்காது இடத்தைப் பிடித்துள்ளார்.
90 வயதாகும் இவர் கட்டுமானத்துறை மூலம் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
5. உதய் கோடாக்
உதய் கோடாக்
14.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினைப் பெற்று உதய் கோடாக் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
வங்கித் துறை மூலம் இவருக்கு இவ்விடம் கிடைத்துள்ளது.
6. சிவ் நாடார்
சிவ் நாடார்
கனிணித் துறை மூலம் சிவ் நாடார் இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
74 வயதாகும் இவரின் சொத்து மதிப்பு 14.4 பில்லியன் டாலர்கள் ஆகும்.
7. இராதாகிஷன் தமானி
இராதாகிஷன் தமானி இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
64 வயதாகும் இவர் 14.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினை முதலீடுகள், சில்லறை விற்பனை தொழில்கள் மூலம் ஈட்டிள்ளார்.
8. கோத்ரேஜ் குடும்பம்
12 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புக்களை கொண்டு கோத்ரேஜ் குடும்பம், இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
9. லட்சுமி மிட்டல்
69 வயதாகும் லட்சுமி மிட்டல் இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இரும்புத் துறை மூலம் 10.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினைப் பெற்றுள்ளார்.
10. குமார் பிர்லா
குமார் பிர்லா இந்திய பணக்காரர்கள் 2019 பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
52 வயதாகும் இவர் 9.6 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினைக் கொண்டுள்ளார்.
மறுமொழி இடவும்