டாப் 10 உலகின் உயரமான விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இப்புவியில் உள்ள விலங்குகள் அனைத்தும் அதனுடைய தேவைகளுக்கு ஏற்ப உயரத்தினைக் கொண்டிருக்கின்றன. அந்த சுவராசியமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.
ஒட்டகச்சிவிங்கி

உலகின் உயர்ந்த விலங்கு எது? என்றால் ஒட்டகச்சிவிங்கி என்று சிறு குழந்தைகூட சொல்லிவிடும்.
ஒட்டகச்சிவிங்கி 4.2மீ முதல் 5.7மீ உயரத்தினைக் கொண்டு உலகின்உயரமான பாலூட்டியாக விளங்குகிறது.
இதனுடைய கழுத்து 2.4மீ உயரத்தினையும், கால் 1.8மீ உயரத்தினையும் கொண்டு இதனை மிகஉயர்ந்த விலங்காகியுள்ளது.
காடுகளில் இதனுடைய சராசரி ஆயுட்காலம் 10-15 ஆண்டுகள் ஆகும்.
யானை

ஒட்டசிவிங்கிக்கு அடுத்து யானை உயரமான பாலூட்டி ஆகும். ஆப்பிரிக்க புல்வெளி யானைகள் 3.2மீ முதல் 3.9மீ உயத்தினைக் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்க காட்டு யானைகள் 2.4மீமுதல்2.7மீ உயரத்தினைக் கொண்டுள்ளன.
உலகில் உள்ள மொத்த யானைகளில் 8 சதவீதம் திருட்டுத்தனமாக வேட்டையாடப் படுகின்றன.
நெருப்புக்கோழி

2.1மீ முதல் 2.8மீ உயரமுள்ள இது பறவைகளில் மிகப்பெரியதும், உயரமானதும் ஆகும். இதனுடைய நீண்ட கழுத்து மற்றும் கால்கள் இப்பறவையின் உயரத்திற்கு காரணமாக அமைகின்றன.
பறக்க இயலாத இப்பறவையானது மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஓடுகிறது.
நெருப்புக்கோழி தரையில் வாழும் விலங்குகளில் பெரிய கண்விழியைக் கொண்டுள்ளது.
ஒட்டகம்

ஒட்டகம் 1.85மீ முதல் 2.15மீ உயரத்தினைக் கொண்டுள்ளது. இதனுடைய முதுகில் உள்ள திமிலில் கொழுப்பினை சேகரித்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கின்றது.
இதனால் ஒரே நேரத்தில் 151 லிட்டர் தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொள்ள இயலும்.
மூஸ்

இது மான்களில் மிகப்பெரியது. 1.4 முதல் 2.1மீ உயரத்தினைக் கொண்டுள்ளது. தாவர உண்ணியான இவ்விலங்கு புதர்கள், பைன்-கூம்புகள், பாசி மற்றும் நீர்வாழ் தாவரங்களை உண்ணுகின்றன.
இவ்விலங்கு நீர்வாழ் தாவரங்களை உண்ணுவதற்காக நீரில் நீந்திச் செல்கின்றன.
குதிரை

குதிரைகளின் அதிக உயரம் 1.83 மீட்டர் ஆகும். சவாரி குதிரைகளின் உயரம் 1.5 மீட்டர் ஆகும். குதிரையின் கண், மூக்கு, காதுப் பகுதிகள் மிகவும் உணர்ச்சி மிகுந்தவை.
குதிரையின் தொடுதிறனானது தன் உடம்பில் ஒருசிறு பூச்சி அமர்ந்தால்கூட அறியுமளவுக்கு நுட்பமானது. குதிரையால் நின்று கொண்டே தூங்க முடியும்.
காட்டெருது

காட்டெருதுகளின் வகைகளான அமெரிக்க காட்டெருது 2மீ உயரமும், ஐரோப்பிய காட்டெருது 2.1மீ உயரத்துடனும் காணப்படுகின்றன.
அமெரிக்க காட்டெருது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாலூட்டி விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
காண்டாமிருகம்

1.8மீ முதல் 2மீ உயரம் உள்ள இது நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதாகும். 1.5-5 செமீ தடித்த தோலும், 1-1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட
இப்பெரிய விலங்கு 40 கிமீ வேகத்தில் ஓடவும் வல்லது. தாவர உண்ணியான இது 60 ஆண்டுகள் உயிர் வாழும்.
ஆசிய காட்டெருமை

1.5மீ முதல் 1.9மீ உயரம் இவ்விலங்கு இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. இது வீட்டுக் காட்டெருமையின் முன்னோர் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் அஸ்ஸாமில் இது காணப்படுகிறது.
நீர்யானை

1.4மீ முதல் 2மீ உயரம் கொண்ட நீர்யானை நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. கூட்டமாக வாழும் தன்மையுடைய இவ்விலங்கு 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழும்.
ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும்.
டாப் 10 உலகின் உயரமான விலங்குகள் பற்றி அறிந்து கொண்டீர்களா? உயரமான விலங்குகள் காடுகளிலேயே காணப்படுகின்றன. இவ்விலங்குகள் தாவர உண்ணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!