டாப் 10 உலகின் பசுமையான நாடுகள் பற்றி பார்ப்போம்.
யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு எண்ணை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் உலகின் 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு சுற்றுசூழல், மனிதநலம் ஆகியவற்றை பாதுகாக்க நாடுகள் செயல்படும் விதத்தினைக் கொண்டு உலகின் பசுமையான நாடுகளின் தரவரிசைப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.
இப்பட்டியலைக் கொண்டு நாடுகள் எவ்வாறு சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தினைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தரவரிசைப்பட்டியல் உருவாக்கப்பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைக்கு சுற்றுச்சூழலின் பிரச்சினைகளாக நீர்வளம், வேளாண்மை, காடுகள், மீன் வளர்ப்பு, பல்லுயிர் மற்றும் வாழிடங்கள், காலநிலை மற்றும் ஆற்றல் ஆகியவை உள்ளன.
இவற்றின் பாதுகாப்பினை அளவீடுகளாகக் கொண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு எண் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு எண் மொத்தம் 100 என கணக்கிடப்பட்டுள்ளது.
டாப் 10 உலகின் பசுமையான நாடுகளைக் காணலாம்.
வ. எண் | நாடு | சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு எண் |
1 | பின்லாந்து | 90.68 |
2 | ஐஸ்லாந்து | 90.51 |
3 | ஸ்வீடன் | 90.43 |
4 | டென்மார்க் | 89.21 |
5 | ஸ்லோவேனியா | 88.98 |
6 | ஸ்பெயின் | 88.91 |
7 | போர்ச்சுக்கல் | 88.63 |
8 | எஸ்டோனியா | 88.59 |
9 | மால்டா | 88.48 |
10 | பிரான்ஸ் | 88.20 |
இந்தியா 53.58 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் 141-வது இடத்தில் உள்ளது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!