பொதுவாக நாம் ஒவ்வொருவரும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலா செல்கிறோம். அவ்வகையில் உலகமக்களைக் கவர்ந்த டாப் 10 நகரங்கள் 2017 பற்றிப் பார்ப்போம்.
2017-ல் உலக மக்களை கவர்ந்த சுமார் 132 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் 202 இலட்சம் மக்களைக் கவர்ந்து தாய்லாந்தின் பாங்காங் முதலிடத்தில் உள்ளது.
சென்னை 57 இலட்சம் மக்களைக் கவர்ந்து 23-வது இடத்தினையும், மும்பை 53.5 இலட்சம் மக்களைக் கவர்ந்து 27-வது இடத்தையும் பெற்றுள்ளது.
பாங்காங், தாய்லாந்து
பாங்காங்
202 இலட்சம் மக்களைக் கவர்ந்து பாங்காங் முதலிடத்தில் உள்ளது.
இங்குள்ள குறுகிய கால்வாயின் மிதக்கும் சந்தைகள், பழமையான கோவில்கள், தெரு உணவுக்கூடங்கள் உலகப் பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.
இந்நகரம் பழமைக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் விளங்குகிறது.
லண்டன், இங்கிலாந்து
லண்டன்
200 இலட்சம் மக்கள் இங்கு வந்ததால் இவ்விடம் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிக் பென், வெஸ்ட்மின்ஸ்டர் அபே மற்றும் டவர் பிரிட்ஜ் ஆகியவை இந்நகரத்தின் மிகவும் பிரபலமான அடையாளச் சின்னங்களாகும்.
பாரீஸ், பிரான்ஸ்
161.3 இலட்சம் மக்களைக் கவர்ந்து பாரீஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இவ்விடத்தின் புதுமாதிரியான ஷாப்பிங், கட்டிடங்கள் மற்றும் உணவங்கள் மக்களை கவர்ந்திழுக்கின்றன.
துபாய், ஐக்கிய அரபு நாடுகள்
160.1 இலட்சம் மக்கள் இந்நகரைப் பார்வையிட்டாதால் இது நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
செயற்கை நகரமான இது உலகின் உயரமான கட்டிடங்களைக் கொண்டுள்ளது.
புர்ஜ் கலீபா, புர்ஸ் அல் அரப், படகு வடிவ உணவகம் ஆகியவை செயற்கை தீவில் அமைந்துள்ள பிரம்மாண்டவைகளாகும்.
சிங்கப்பூர்
சிங்கப்பூர்
134.5 லட்சம் மக்களைக் கவர்ந்து இந்நகரம் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகத்தின் சிறந்த விமான நிலையத்தைப் பெற்றுள்ளது. இங்கு குறைந்த விலையில் தரமான உணவுகள் அபரிதமாக கிடைக்கின்றன.
டோக்கியா, ஜப்பான்
டோக்கியா
125.1 இலட்சம் மக்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளதால் இது பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெறுகிறது.
டோக்கியா நகரில் பூங்காங்கள் மற்றும் மரங்களால் சூழப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் வழிபாட்டு இடங்கள் அதிகம் உள்ளன.
சுகுஜி மீன் சந்தை மற்றும் ஹராஜூகு ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.
சியோல், தென்கொரியா
124.4 லட்சம் மக்களை ஈர்த்து சியோல் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பெறுகிறது.
சியோல் உலகின் அழகு மற்றும் புதுமையான தலைநகரங்களில் முன்னணி வகிக்கிறது. சுற்றுலாபயணிகள் இங்கு அதிகளவு ஷாப்பிங் செய்கின்றனர்.
இங்கு பராம்பரிய பௌத்த கோயில்கள், உயரமான வானளாவிய பழங்கால டீஹவுஸ், அழகான பூங்காக்கள் உள்ளன.
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா நாடுகள்
123.6 இலட்சம் மக்கள் இவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதால் இது பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெறுகிறது.
அமெரிக்காவின் பெரிய நகரமான நியூயார்க்கில் உள்ள உணவு விடுதிகள், ஷாப்பிங் சென்டர்கள், அமெரிக்க அருங்காட்சியகம் ஆகியவை காண்போரை கவர்ந்திழுக்கின்றன.
கோலாலம்பூர், மலேசியா
கோலாலம்பூர்
120.8 இலட்சம் மக்களை கவர்ந்த இந்நகரம் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இந்நகரத்தின் தெருவோரக் கடைகளின் உணவுகள் மிகவும் பிரசித்தமானவை.
விடுமுறையைக் கழிக்க இந்நகரம் மிகவும் ஏற்ற இடம். மக்கள் பெரும்பாலும் இந்நகருக்கு விடுமுறைக்காகவே வருகை தருகின்றனர்.
இஸ்தான்புல், துருக்கி
இஸ்தான்புல்
92.4 இலட்சம் மக்களைக் கவர்ந்துள்ள இந்நகரம் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பெறுகிறது.
இங்குள்ள பராம்பரிய கட்டிடக்கலை, அழகிய உடைகள், உணவங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கவனத்தினை ஈர்க்கின்றன.
உலகமக்களைக் கவர்ந்த டாப் 10 நகரங்கள் 2017 எவை எனப் பார்த்தோம். 2018ம் ஆண்டு எப்படி இருக்கும்?
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!