உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் எவை என்று பார்ப்போம்.
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவற்றைக் கொண்டே பொருளாதார வல்லுநர்கள் பொதுவாக குறிப்பிடுகின்றனர்.
இம்முறை ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மிகச்சரியாக அளவிடும் முறை என்று கூற முடியாது. எனினும் குறைந்த காலஅளவில் பொருளாதார நிலையை அளவிடும் நல்ல முறை என்று கூறலாம்.
கத்தார்- 1,40,649 டாலர்
கத்தார் உலக பணக்கார நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது. கத்தார் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 1,40,649 டாலர்கள் ஆகும்.
எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ள கத்தாரில் அரசாங்க வருமானமானது 70 சதவீதம் எண்ணெய் வளத்திலிருந்தும், 60 சதவீதம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்தும், 85 சதவீதம் ஏற்றுமதியிலிருந்தும் கிடைக்கப் பெறுகிறது.
இந்நாட்டின் பொருளாதார தன்னிறைவு காரணமாக 2022 உலகக் கால்பந்து போட்டியை நடத்த இந்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லக்சம்பர்க் – 97,662 டாலர்
லக்சம்பர்க் உலக பணக்கார நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. லக்சம்பர்க் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 97,662 டாலர்கள் ஆகும். இம்மதிப்பு உலக சராசரியைப் போல் ஒன்பது மடங்காகும்.
இந்த வலுவான பொருளாதாரத்திற்கு இந்நாட்டின் துடிப்பான நிதித்துறை, நிதானமான நிதியக் கொள்கை, மாறும் தொழில்துறை மற்றும் இரும்புத்தொழில் ஆகியவையே காரணம் ஆகும்.
இந்நாட்டின் வங்கித்துறையானது 1.24 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பினைக் கொண்டு இந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய துறையாக விளங்குகிறது.
சிங்கப்பூர் – 82,763 டாலர்
சிங்கப்பூர் உலக பணக்கார நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 87,763 டாலர்கள் ஆகும். இம்மதிப்பு உலக சராசரியைப் போல் ஐந்து மடங்காகும்.
இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அதன் நிதித்துறை சேவைகள், இராசாயன ஏற்றுமதி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதன் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை காரணங்களாகும்.
இந்நாட்டின் துறைமுகம் உலகின் இரண்டாவது பரபரப்பான துறைமுகமாக உள்ளது.
குவைத் – 73,246 டாலர்
குவைத் உலக பணக்கார நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது. குவைத் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 73,246 டாலர்கள் ஆகும்.
குவைத் நாட்டின் நாணயமான குவைத் தினார் உலகின் அதிக பணமதிப்பு உடையதாக தற்போதும் விளங்குகிறது.
உலகின் உள்ள மொத்த எண்ணெய் வளத்தில் 10 சதவீதம் இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை பெட்ரோலிய பொருட்கள் பூர்த்தி செய்கின்றன.
இந்நாட்டு அரசாங்கத்தின் மொத்த வருவாயில் ஏற்றுமதியானது 95 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
புரூனே – 71,185 டாலர்
புரூனே உலக பணக்கார நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. புரூனே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 71,185 டாலர்கள் ஆகும்.
இந்நாட்டின் பொருளாதார வளத்திற்கு அரசு விதிமுறைகளின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோருக்கான நலன்புரி நடவடிக்கைகள் காரணமாகும்.
இந்நாட்டின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் பெறப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகள் – 67,674 டாலர்
ஐக்கிய அரபு நாடுகள் உலக பணக்கார நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 67,674 டாலர்கள் ஆகும்.
இந்நாட்டின் பொருளாதாரத்தில் எண்ணெய் வளம், சேவை துறை மற்றும் தொலைத் தொடர்பு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரபு நாடுகளில் ஐக்கிய அரபு நாடுகள் இரண்டாவது பெரிய பொருளாதார வளத்தைப் பெற்றுள்ளது.
நார்வே – 64,856 டாலர்
நார்வே உலக பணக்கார நாடுகளில் ஏழாவது இடத்தில் உள்ளது. நார்வே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 64,856 டாலர்கள் ஆகும்.
இந்நாட்டின் பொருளாதாரத்தில் மீன்பிடித்தல், இயற்கை வளங்கள், எண்ணெய் வளங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
நார்வே உலகில் குரூட் ஆயில் ஏற்றுமதியில் 8-வது இடத்திலும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியில் 9-வது இடத்திலும், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 3-வது இடத்திலும் உள்ளது.
சுவிட்சர்லாந்து – 57,235 டாலர்
சுவிட்சர்லாந்து உலக பணக்கார நாடுகளில் எட்டாவது இடத்தில் உள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 57,235 டாலர்கள் ஆகும்.
இந்நாட்டின் பொருளாதாரத்தில் சுவிஸ் வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகின் பணக்காரர்கள் மற்றும் பணக்கார தொழில் நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். அதனால் இந்நாடு முதலீடுக்கான அதிக மூலதனத்தைப் பெற்றுள்ளது.
உலகின் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை பெற்றுள்ள முதல் பத்து நகரங்களில் இந்நாட்டில் உள்ள சூரிச் மற்றும் ஜெனீவா நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் – 54,630 டாலர்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலக பணக்கார நாடுகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுவிச்சர்லாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 54,630 டாலர்கள் ஆகும்.
இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அதன் பெரிய உள்நாட்டு வாகனத் தொழில், தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கள், தொழில் முனைவோர் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களாட்சி முறை ஆகியவை காரணங்களாகும்.
சவுதி அரேபியா – 51,924
சவுதி அரேபியா உலக பணக்கார நாடுகளில் பத்தாவது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தனிநபர் பொருட்கள் வாங்கும் திறன் (PPP) ஆகியவை 51,924 டாலர்கள் ஆகும்.
இந்நாடு உலகின் நிருபிக்கப்பட்ட எண்ணெய் வளத்தில் 18 சதவீதத்தைப் பெற்றுள்ளது. உலகின் பெட்ரோல் ஏற்றுமதியில் முக்கிய பங்கினை இந்நாடு பெற்றுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி முக்கிய காரணமாகும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!