உலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்

உலகின் டாப் 10 மலைச்சிகரங்கள் பத்தில் ஒன்பது சிகரங்கள் இமயமலையிலே அமைந்துள்ளன என்பது ஓர் ஆச்சரியமான விசயம். 

புவியில் சுமார் 100 மலைகளுக்கு மேலே அமைந்துள்ளன. அவற்றுள் நிறைய மலைகள் ஆசிய, ஐரோப்பிய புவித்தட்டின் ஓரங்களில் அமைந்துள்ளன.

மலைச்சிகரங்கள் தன்னுடைய உயரத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கின்றன. உலகின் டாப் 10 மலைச்சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கின்றன.

உலகின் டாப் 10 மலைச்சிகரங்கள் பற்றிப் பார்ப்போம்.

1. எவரெஸ்ட் – (8848 மீட்டர்)

எவரெஸ்ட்
எவரெஸ்ட்

இது கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தோடு உலகின் மிக உயரமான சிகரம் என்ற பெருமையைப் பெறுகிறது. இது இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. சீனா மற்றும் நேபாளத்தின் சர்வதேச எல்லையானது இதனுடைய உச்சியில் அமைந்துள்ளது.

2. கே2 – (8611 மீட்டர்)

கே2
கே2

கடல் மட்டத்திலிருந்து 8611 மீட்டர் உயரமுடைய இது உலகின் இரண்டாவது உயர்ந்த மலைச் சிகரம் ஆகும். இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்படும் கரோகரம் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் ஜில்ஜிட்-பல்திஸ்தானில் அமைந்துள்ளது.

3. கஞ்சஞ்சங்கா – (8586 மீட்டர்)

கஞ்சஞ்சங்கா
கஞ்சஞ்சங்கா

இது உலகின் மூன்றாவது பெரிய சிகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 8586 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ளது. இது இந்திய நேபாள எல்லையில் காணப்படுகிறது. கஞ்சஞ்சங்கா என்பதற்கு பனியின் ஐந்து புதையல்கள் என தோராயமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

கஞ்சஞ்சங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று இந்திய – நேபாள எல்லையிலும், இரண்டு நேபாளத்திலும் உள்ளன.

4. இலோட்ஃசே – (8516 மீட்டர்)

இலோட்ஃசே
இலோட்ஃசே

8516 மீட்டர் உயரமுடைய இது உலகின் நான்காவது உயரமான சிகரம் ஆகம். இது திபெத் மற்றும் நேப்பாள எல்லையில் அமைந்துள்ளது.

இலோட்ஃசே என்பதற்கு திபெத்திய மொழியில் தெற்கு கொடுமுடி என்பது பொருள் ஆகும்.

5. மக்காலு – (8462 மீட்டர்)

மக்காலு
மக்காலு

கடல் மட்டத்திலிருந்து 8462 மீட்டர் உயரத்தில் உள்ள இது உலகின் ஐந்தாவது உயர்ந்த சிகரம். இது இமயமலைத் தொடரில் எவரெஸ்ட் சிகரத்துக்கு தென்கிழக்கே 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இது நேபாள, சீன எல்லைகளுக்கு இடையில் காணப்படுகிறது. இது தனி முகடாக பார்ப்பதற்கு நான்முகம் உடைய பிரமிட் வடிவத்தில் இருக்கிறது.

6. சோ ஓயு – (8150 மீட்டர்)

சோ ஓயு
சோ ஓயு

உலகின் ஆறாவது உயர்ந்த சிகரமான இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 8150 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்திற்கு மேற்கே 20 கிமீ தொலைவில் நேபாளத்திற்கும், சீனாவிற்கும் இடையே அமைந்துள்ளது.

சோ ஓயு என்பதற்கு திபெத்திய மொழியில் பசுநீல அம்மன் என்று பொருள்படும். முதன் முதலாக இச்சிகரத்தின் தென்மேற்கு முகமாக ஆஸ்திரிய நாட்டினர் ஏறி இதன் உச்சியை அடைந்தனர்.

7. தவளகிரி – (8167 மீட்டர்)

தவளகிரி
தவளகிரி

இது உலகின் ஏழாவது மிகப்பெரிய சிகரம் ஆகும். இது நேப்பாளத்தின் தவளகிரி இமாலயம் என்னும் கிழக்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது.

போக்காரா என்னும் சிறுநகரத்திற்கு வடமேற்கே இச்சிகரம் காணப்படுகிறது. தவளகிரி என்பதற்கு வெண்மலை என்பது பொருளாகும்.

8. மனசுலு – (8163 மீட்டர்)

மனசுலு
மனசுலு

கடல் மட்டத்திலிருந்து 8163 மீட்டர் உயரம் உள்ள இது உலகின் எட்டாவது பெரிய சிகரம் ஆகும். இது நேப்பாளத்தில் மனசிரி இமாலயம் என்னும் பகுதியில் காணப்படுகிறது. மனசுலு என்பதற்கு சமஸ்கிருதத்தில் மனதின் சிகரம் என்பது பொருள் ஆகும்.

9. நங்க பர்வதம் – (8126 மீட்டர்)

நங்க பர்வதம்
நங்க பர்வதம்

இது இமயமலைத் தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு சிகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 8126 மீட்டர் உயரமுடைய இது உலகின் ஒன்பதாவது பெரிய சிகரம் ஆகும்.

இது மேற்கு இமாலயத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குத் தெற்கே அமைந்துள்ளது.

10. அன்னபூர்னா – (8091 மீட்டர்)

அன்னபூர்னா
அன்னபூர்னா

நேப்பாளத்தில் அமைந்துள்ள இது உலகின் பத்தாவது பெரிய சிகரம் ஆகும். இந்த மலைச்சிகரத்தின் வழியே வழியும் நீரோடைகள் வேளாண்மைக்கும், மேய்ச்சல் நிலங்களுக்கும் பயன்படுகின்றன.

இதனால் இம்மலை எல்லோருக்கும் உணவளிப்பதாகக் கருதப்படும் இந்து கடவுளான அன்னபூரணியின் பெயரால் வழங்கப்படுகிறது.

இயற்கையின் பிரமாண்டத்தை ரசிக்கும் வேளையில், இயற்கை காப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.