கற்றல் நன்றே!
டிஜிட்டல் வழியாகக் கற்றல் நன்றே!!
Diksha
பள்ளிக்கூட மாணவ மணிகளுக்கான தளம் Diksha. இந்த தளத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை CBSE, NCERT மற்றும் அனைத்து மாநில பாடத் திட்டங்கள் சார்ந்த 80 ஆயிரம் மின்னணு புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன.
இந்த தளம் செயலி வடிவத்திலும் இணையதளம் வடிவத்திலும் உள்ளது.
ஆப்: கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் iOSல்
இணையதள முகவரி: diksha. gov. in
e-PATHSHALA
இந்த தளத்தில் முதல் வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை NCERT பாடத்திட்டம் சார்ந்த 2000 காணொளிகள், 1886 ஒலி நாடாக்கள் மற்றும் 696 மின்னணு புத்தகங்கள் உள்ளன.
செயலி மற்றும் இணையதளம் வடிவில் உள்ளது.
ஆப்: கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ல்
SWAYAM
இந்த தளத்தில் கல்லூரி மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். (இளநிலைப் படிப்பு /முதுநிலை படிப்பு)
இணையதளம்: swayam. gov. in
SWAYAM PRABHA
இந்த தளத்தில் 32 டி.டி.எச். சேனல்கள் உள்ளன. 24 மணி நேர ஒளிபரப்பு .
11 & 12 வது வகுப்பு, இளநிலை, முதுநிலை பொறியியல், தொழில் கல்வி உள்ளிட்ட பாடங்கள் ஒளிபரப்பு.
ஆர்ட்ஸ், அறிவியல், வணிகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இணையதள முகவரி: swayamprabha. gov. in
எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com