டேட்டா என்பது புதிய ஆயில்

டேட்டா என்பது புதிய ஆயில்

இன்றைய காலகட்டத்தில் ‘டேட்டா’ என்கிற சொல் அன்றாடம் பழக்கத்தில் இருந்து வருகிறது. ‘டேட்டா’ என்பது ‘புதிய ஆயில்’ (Oil) என்று முதன்முதலாக கூறியவர் பிரிட்டிஷ் கணிதவியலாளர் கிளைவ் ஹம்பி, (Clive Humby)
2006-ல் தமது கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறினார்.

‘ஆயில்’ என்பது எந்த அளவுக்கு இன்றியமையாத ஒன்று ஆக இருக்கிறதோ அது போலவே ‘டேட்டா’ என்பது வர்த்தக வெற்றிகளுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒரு பெரிய வளமாக விளங்குகிறது என்று அவர் எழுதினார்.

அவர் அவ்வாறு கூறிய கூற்று (phrase) பின்னர் பல்கேரியா அரசியலாளர் மேக்லனா குனேவா (Meglena Kuneva) அமெரிக்க தொழில் அதிபர் அனடோலே ஜெர்ஷான் (Anatole Gershon) ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது.

டேட்டா என்பது புதிய ஆயில் என்கிற கருத்தாக்கத்தைப் பற்றி எழுதப்பட்ட சில கட்டுரைகள் குறித்த விவரம் பின்வருமாறு :

2017 ஆம் ஆண்டு, எகனாமிஸ்ட் இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு : ‘டேட்டா உலகில் அதிக மதிப்பு வாய்ந்த ஆதார வளம்’

இந்த கட்டுரையில் ஆயில் என்பதை விட டேட்டா மிகுந்த மதிப்பு வாய்ந்ததாக ஆகி விட்டது என்று எடுத்துரைக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு, ப்ரூஸ் ஷெனிர் (Bruce Schneier) என்ற எழுத்தாளர், ‘டேட்டா என்பது புதிய ஆயில்’ அது பிரைவசியைக் கொல்கிறது (data is the new oil and it is killing privacy) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்தார்.

இதில் அவர் தனிநபரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகிரப்படுவதால் நேரும் பிரைவசி வெளிப்படுதல் குறித்த கவலையை தெரிவித்தார்.

டேட்டா புரட்சி என்ற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு, Mayer Schonberger & Kenneth Cukier என்ற இரண்டு எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய நூலில் அவர்கள், பிக் டேட்டா சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

வேர்ல்ட் எகானமிக் பாரம் எனப்படும் உலகப் பொருளாதார அமைப்பு, 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘டேட்டா டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய ஆயில்’ என்ற தலைப்பிலான அறிக்கை பொருளாதார வளர்ச்சிக்கும் புத்தாக்கங்களுக்கும் டேட்டாவின் பங்களிப்பு பற்றி விரிவாக பேசியது.

2018 ஆம் ஆண்டு, ‘டேட்டாவின் மதிப்பு’ என்ற தலைப்பில் ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யு வெளியிட்ட கட்டுரை, வர்த்தகத்திற்கு மதிப்பை உருவாக்க ஏதுவாக டேட்டாவை எப்படி பயன்படுத்த இயலும் என்று விவாதித்தது.

இவற்றுக்கு எல்லாம் முரணாக, 2019 ஆம் ஆண்டு, எவ்ஜினி மோரோசோவ் (Evgeny Morozov) என்ற தகவல் தொழில்நுட்ப எழுத்தாளர் எழுதிய கட்டுரை, ‘டேட்டா என்பது புதிய ஆயில்’ என்ற கூற்று தவறுதலாக வழிகாட்டும் ஒன்று என்றும் டேட்டா என்பது மிகவும் சிக்கலானது அது பன்முகத் தன்மை கொண்ட ஆதார வளம் என்றும் வாதிட்டது.

இவ்வாறாக இந்த தலைப்பு பேசுபொருள் ஆக இருந்து வருகிறது.

எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com