ஆசையாய் அணைத்திருப்பேன் முதல்மாதம்
அதன்பின் மறந்திடுவேன் வருடம் முழுவதும்
உருப்படியாய் ஒருவருக்கொருவர் உதவியாய்
இருப்போமென நம்பவில்லை நான்
காதல் கொண்டு என்பேனா தினமுன்
இதழினில் முத்தமழை பொழியாது
கரிசல் காட்டுக் கோடைமழை போல்
பரவும் என் எழுத்துக்கள் என்றாவது ஒருநாள்
பயன்கருதிச் செயல்கள் புரியப் பழகிவிட்டதால்
பயன் என்ன எழுதி? கேள்வி மனதில்
பணமில்லை, பதவியில்லைப் புகழுமில்லை
ஆனாலும்
எனக்குள் நானே உன்னால்தானே
பேசிக் கொள்கிறேன் தோழா
எனவே நன்றிகள் உனக்கு
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!