கண்ணே ! கண்மணியே
கட்டிக் கரும்பே! தேன்கனியே!
உலகத்துக்கு நீ வந்த
நாள் முதலா
உனக்காக உழைக்கிறேன்!
உன்னையவே என்
உசுரா நினைக்கிறேன்!
கண்ணுக்குள்ள உன்ன வச்சு
காத்து இருப்பேன்டா என் மகனே!
கழுத்தை அலங்கரிக்க
கழுத்துக்கு தங்க சங்கிலி வேணுமா
சொல் மகனே!
ஆறு மாசம் வேலை செஞ்சு
அதற்காக ஒதுக்கி வச்சு
சின்ன சங்கிலி நா எடுத்து
உன்ன சிரிக்க விட்டு போட்டுவிட்டேன்!
நீ சிரிச்ச நேரத்துல
என் கவலை எல்லாம் மறந்து விட்டேன்!
அழகான சங்கிலிய
அடகு வைக்க நேரம் ஆச்சு
அப்பாவுக்கு மனசு இல்ல
கேட்ட இடத்தில கடனும் கிடைக்கவில்ல!
மீட்டெடுக்க நேரம் வந்தால்
உனக்கு நான் மீட்டு
எடுத்துக் கொடுத்துடுவேன்!
சீட்டெடுக்க நேரம் வந்தா
நான் சீட்டு எடுத்துக் திருப்பிடுவேன்!
பொறுத்துகோடா என் ராசா!
அப்பா புலம்பலை ஏற்றுக்கொள்டா
என் மகராசா!
பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com